1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (14:26 IST)

நகைக்கடன் தள்ளுபடி - ஒரு வாரத்தில் அரசாணை வெளியீடு!

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும். 
 
கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்து இன்னும் ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என சென்னையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 
 
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்த நகைக்கடன் தள்ளுபடியால் சுமார் 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார். இதுவரை 15 கூட்டுறவு சங்கங்களில் சுமார் 12 கோடி முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் கூறினார்.