வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (19:17 IST)

பிராகஷ் ராஜ் காரை முற்றுகையிட்ட பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்: வைரல் வீடியோ

நடிகர் பிரகாஷ் ராஜின் காரை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் வழிமறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக வின் கொள்கைகளைப் பற்றியும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டைப் பற்றியும் தொடர் விமர்சனம் செய்து வருகிறார். மேலும், கர்நாடகவில் நடைபெறவுள்ள தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரமும் செய்து வருகிறார்.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டதில் பிரகாஷ் ராஜ், இந்தியாவில் மக்களை பிரித்தாளும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும். மேலும், மோடி அரசு, ஆர்எஸ்எஸ் கைகூலியாகி விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
 
இதனால் கோபமடைந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், நேற்றிரவு கர்நாடகாவில் உள்ள கல்புர்கி நகரில், காரில் சென்று கொண்டிருந்த பிரகாஷ் ராஜை வழிமறித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.