ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (15:58 IST)

பாஜகவுக்கு எப்போது வெட்கம் வரும்? முதல்வர் முக,ஸ்டாலின் கேள்வி

MK Stalin
தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின், பாஜகவுக்கு எப்போது வெட்கம் வரும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக மத்திய பாஜக அரசு தெரிவித்திருந்தது. இதுகுறித்து,  எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.

ஆனால், சமீபத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி எங்கே என கேள்வி எழுப்பி தமிழக எம்பிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின், பாஜகவுக்கு எப்போது வெட்கம் வரும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

பிரதமர் மோடி மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்..இன்று வரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று தெரியவில்லை.  உதயநிதி ஒரு செங்கல்லை வைத்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்.  அதன்பிறகாவது பாஜகவுக்கு  வெட்கம் வந்திருக்க வேண்டாமா? என்று தெரிவித்துள்ளார்.