1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (17:12 IST)

2024ஆம் ஆண்டு பாஜக வெளியேற்றப்படும்: உப்புமா கதை கூறிய திமுக எம்பி திருச்சி சிவா

Tiruchi siva
2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெளியேற்றப்படும் என உப்புமா கதை கூறி திமுக எம்பி திருச்சி சிவா பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, ஒரு கல்லூரியில் எப்போதும் உப்புமா போட்டு வந்தார்கள், இதனால் எரிச்சலான மாணவர்கள் உப்புமா வேண்டாம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
அப்போது வார்டன் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டார். இதனை அடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் ஏழு சதவீதம் ரொட்டியும், ஆம்லெட்டும் கேட்டு வாக்களித்தனர், 13 பேர் பூரி கேட்டிருந்தனர், 18 பேர் ஆலு பரோட்டா கேட்டிருந்தனர், 19 பேர் மசாலா தோசை கேட்டு வாக்களித்தனர், 20% பேர் இட்லி கேட்டு வாக்களித்தனர். ஆனால் 23 சதவீதம் பேர் உப்புமாவுக்கு வாக்களித்தனர். எனவே மீண்டும் உப்புமா வெற்றி பெற்றது.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகள் பிரிந்து இருந்ததால் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டது, ஆனால் எங்கள் தலைவர் 2024 ஆம் ஆண்டு அனைவரையும் ஒன்று சேர்த்து உப்புமாவை வெளியேற்றி விடுவார் என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.
 
Edited by Mahendran