திருமாவளவன் குறித்து திமுக தலைமையிடம் புகார் கூறிய கமல் கட்சியினர்.. என்ன காரணம்?
மக்கள் நீதி மய்யம் ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்ததை திருமாவளவன் விமர்சித்த நிலையில் அவர் மீது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் திமுக தலைமையுடன் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.\
சமீபத்தில் திருமாவளவன் பேசியபோது மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாக்கு வாங்கி கூட்டணிக்கு பலம் சேர்க்கும் என்று நான் கருதவில்லை என்றும் இருப்பினும் எங்கள் கூட்டணி வேட்பாளருக்கு கமல்ஹாசன் ஆதரவாளித்துள்ளதை வரவேற்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியின் வேட்பாளருக்கு ஆதரவாளித்த எங்கள் கட்சியை பற்றி திருமாவளவன் இப்படி பேசலாமா என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் திமுக தலைமையிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது
இதனை அடுத்து திமுக தலைமையையும் இது குறித்து திருமாவளவனிடம் விளக்கம் கேட்பதாகவும் இனிமேல் அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் சமாதானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
Edited by Siva