1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 2 நவம்பர் 2018 (10:32 IST)

எப்போது பட்டாசு வெடிக்கலாம்? தமிழக அரசின் புது அறிவிப்பு!!!

தீபாவளியன்று மக்கள் எப்போது பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை  மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்ததையடுத்து தீபாவளியன்று அதிகாலை காலை 4 - 5 மணி முதலும், இரவு 9-10 மணி முதலும் பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றமே நேரத்தை அறிவித்தது.
 
இந்நிலையில் தற்பொழுது தமிழக அரசு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம். இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என அறிக்கை வெளியிட்டிருக்கிறது.