செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 நவம்பர் 2018 (10:26 IST)

இது சர்கார் தீபாவளி மட்டும் இல்ல... சிம்பு தீபாவளி!

இந்த தீபாவளி சர்கார் தீபாவளி என அனைவரும் நினைத்து வரும் நிலையில் தற்போது இது சிம்பு ரசிகர்களுக்கான தீபாவளியாகும் மாறியுள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்தில் கெத்தான நடிப்பின் மூலம் சிம்பு தனது ரசிகர்களை குஷிப்படுத்தினார். 
 
அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதோடு, சுந்தர்.சி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் நாயகி மேகா ஆகாஷ் நடித்துள்ளார். 
 
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மகத் மற்றும் கேத்ரின் தெரேசா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். தர்போது விஷயம் என்னவெனில் இந்த படத்தின் லைட்டில் மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் ஸ்பெஷல் செய்தியாக இந்த படத்தின் டைட்டில் வி என்ற எழுத்தில் துவங்கும் எனவும் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.