1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 15 நவம்பர் 2018 (12:45 IST)

கஜா புயல் கரையைக் கடக்கும் நேரம் எப்போது..?

இரவு 8 மணிமுதல் இரவு 11 மணிக்குள் கஜாம் புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மாநில அவசரக்கட்டுப்பாடு மையத்திற்கு சென்னை வானிலை மையம் தகவல்.
கடலூர் - பாம்பன் இடையே நாகைக்கு அருகே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.
 
சென்னைக்கு அருகே 290 கிமீ ..,நாளைக்கு அருகே 290 கிமீல் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
 
சின்னக்குப்பம்,பெரிய குப்பம் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.திருவள்ளூரில் காஜா புயல் எதிரொலியாக எண்ணூர் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
 
கஜா புயலால்  அண்ணா பல்கலைத் தேர்வுகள் வரும் 22 ஆம்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.