ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (12:15 IST)

25 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்பீடாக வரும் கஜா!!!

கஜா புயலின் வேகமானது 18 கிமீட்டர் வேகத்திலிருந்து 25 ஆக அதிகரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல்  திசைமாறிய காரணத்தால் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே கரையைக்கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
இன்று இரவு 11.30 மணிக்கு கஜா புயல் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே கரையை கடக்க இருக்கிறது. புயலானது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.
 
புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் 6 மாவட்டங்களின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
அசம்பாவிதங்களை தடுக்க அந்தந்த மாவட்டங்களில் தமிழக அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் கஜா புயலின் வேகமானது 25 கிலோமீட்டராக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வேகமானது மேலும் அதிகரிக்கூடும்.