வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (08:57 IST)

‘உன்னவிட கட்சிக்கு அதிகமா உழச்சவன்லாம் இருக்கான்’… உதயநிதியை மறைமுகமாக சீண்டினாரா துரைமுருகன்?

சமீபத்தில் ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், திமுகவில் உள்ள சீனியர்களை கிண்டல் செய்யும் விதமாக பேசினார். அதில் துரைமுருகனைக் குறிப்பிட்டு அவர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. பின்னர் அதற்கு துரைமுருகன் பதிலளித்ததும் அதன் பின்னர் தாங்கள் இருவரும் நண்பர்கள் என்று சமாளித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் துரைமுருகனுக்கு கோபம் இருப்பது புரிந்தது.

அந்த நிகழ்ச்சி நடந்த அடுத்த் சில தினங்களில் மற்றொரு நிகழ்வில் பேசும்போது உதயநிதி ஸ்டாலின், திமுகவில் இளைஞர்களுக்கு சீனியர்கள் வழிவிட வேண்டும் என பேசியிருந்தார். இதன்ல் திமுகவில் சீனியர் vs இளைஞர்கள் என்ற மோதல் எழுந்துள்ளதா என விவாதங்கள் நடந்தன.

இந்நிலையில் நேற்று வேலூரில் நடந்த திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் “நிறைய இளைஞர்கள் திமுக நோக்கி வருகிறார்கள். அவர்கள்தான் திமுகவின் பலம். நான் திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இணைந்தபோது இளைஞனாகதான் வந்தேன். அன்றே அண்ணா சொன்னார். நாற்றங்காலில் இருக்கும் பயிரை எடுத்து சேற்றில் நட்டால்தான் வளரும். அதனால் உங்களை கட்சியில் தகுந்த நேரத்தில் சேர்த்து நான் மாற்றுகிறேன் என்று அண்ணா சொன்னார்.

அதே போல வரும் இளைஞர்களும் தடம் பார்த்து வாருங்கள். ஏனென்றால் உங்களை விட கட்சிக்கு அதிகமாக உழைத்தவர்கள் இருக்கிறார்கள். கட்சிக்காக, பொண்டாட்டியிடம் திட்டு வாங்கி நிறைய தியாகம் செய்தவர்கள் இருக்கிறார்கள். அதனால் வந்தவுடனேயே எல்லாம் கிடைத்துவிடும் என வராதீர்கள்” எனப் பேசியுள்ளார்.

அதில் அவர் பேசும் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் அந்த இடத்தில் கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினைதான் மறைமுகமாக தாக்கி பேசுகிறார் என சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.