கே.ஜி.எஃப் -2 படத்தைத் தடை விதிக்க முடியாது - கர்நாடக நீதிமன்றம்
கேஜிஎஃப் -2 திரைப்படம் கடந்த மாதம் 14 ஆம் தேதி ரிலீசாகிப் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை தடை செய்ய வேண்டுமென நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் – ஸ்ரீ நிதி நடிப்பில் கடந்த மாதம் 15 ஆம் தேதி வெளியான படம் கேஜிஎஃப்-2 படம் ரிலீஸானது.
இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று ரூ.1500 கோடிக்கு மேல் சாதனை படைத்தது.
இப்படத்தின் 3 வது பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையொய்ல், இப்படத்தில் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் வகையில் காட்சி அமைந்துள்ளது. இது ஆரோக்கியமான சமூக பழக்கம் என்றும் அது ஒரு ஸ்டைல் என்பதுபோல் புகைப்பிடித்தலை ஊக்குவிப்பதுபோல் உள்ளது அதனால் இப்படத்தை திரையிடக்கூடாது என கர்நாடக மாநில ஐகோர்டில் பொது நல மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கே.ஜி.எஃப்-2 படம் வெளியாகிவிட்டதால், இப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று கூறிய மனுவை தள்ளுபடி செய்தது.