திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 25 மே 2022 (12:41 IST)

U2 Brutus சேனலை உடனே தடை செய்ய வேண்டும்: ஓபிஎஸ்

OPS
நடராஜரை இழிவுபடுத்தும்U2 Brutus யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
 
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ’சிதம்பரம் நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் இந்து கடவுளை இழிவு படுத்திய இந்துக்களின் மனதை புண்படுத்திய, இந்து தெய்வத்தை விமர்சனம் செய்த U2 Brutus யூட்யூப் சேனல் உடனே தடை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்
 
ஏற்கனவே U2 Brutus யூடியூப் சேனலில் பதிவாகி உள்ள பல வீடியோக்களுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது