வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 30 டிசம்பர் 2020 (07:52 IST)

ரஜினி அரசியல் முடிவை கணித்த ஜோதிடர் தொழிலை விட முடிவா?

ரஜினி அரசியல் முடிவை கணித்த ஜோதிடர் தொழிலை விட முடிவா?
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதத்திற்குள் கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் அவ்வாறு அவர் அரசியல் கட்சியை தொடங்கவில்லை என்றால் தான் ஜோதிடர் தொழிலையே விட்டு விடுவதாகவும் ஜோதிடர் ஷெல்வி அவர்கள் பேட்டி ஒன்றில் சவால் விட்டிருந்தார் 
 
ரஜினியின் அரசியல் கட்சியில் இணைவதற்காக பாஜகவின் அறிவுசார் பிரிவில் இருந்து விலகிய அர்ஜுனா மூர்த்திக்கு பதிலாக அந்த பதவியில் ஜோதிடர் ஷெல்வி தான் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்றும் தெளிவான ஒரு அறிக்கை விட்டுள்ளார். இதனை அடுத்து ரஜினியின் அரசியல் முடிவை கணித ஜோதிடர் ஷெல்வி தனது தொழிலை விட்டு செல்வாரா? என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
 
மேலும் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் ஜோதிட தொழிலை விட்டு விடுகிறேன் என்று ஷெல்வி கூறிய வீடியோவையும் நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர். பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருக்கும் ஜோதிடர் ஷெல்வி தனது ஜோதிடர் தொழிலை விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்