வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 ஜூலை 2023 (19:44 IST)

மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி சமூகநீதி பேச வேண்டும்; குடிநீதி பேசக் கூடாது ! -அன்புமணி ராமதாஸ்

மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி சமூகநீதி பேச வேண்டும்; குடிநீதி பேசக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 
''காலையில் சாக்கடை தூய்மை செய்யும் பணிக்கு செல்பவர்கள் நாற்றத்தை சகித்துக் கொள்ள தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். அவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது; அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார். இதையெல்லாம் எந்த வகை தத்துவத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
 
சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் போது நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாது என்பது உண்மை தான்.  அதற்கான தீர்வு சாக்கடைகளை தூய்மை செய்வது உள்ளிட்ட பணிகளை எந்திரமயமாக்கி, அதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை  அடுத்தடுத்த நிலையில்  உள்ள பணிகளுக்கு உயர்த்துவது தான் சமூக நீதி!
 
மாறாக, சாக்கடை தூய்மை செய்யும் பணிகளில் உள்ளவர்களுக்கு காலையிலேயே மது கொடுக்க வேண்டும் என்று துடிப்பது மது நீதி. அது மிகவும் ஆபத்தானது.
 
நாற்றத்தை மறக்க மது தான் தீர்வு என்றால், அதை விட கொடிய நாற்றத்துடன் மதுவை அருந்தி விட்டு வீட்டுக்கு வரும் கணவனை சகித்துக் கொள்ள முடியாமல் மனைவிகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அமைச்சர் என்ன தீர்வு வைத்திருக்கிறார்?'' என்று தெரிவித்துள்ளார்.