வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2023 (19:05 IST)

விஜய் அரசியலுக்கு வந்தால் எந்தக் கட்சிக்கு பாதிப்பு? கருத்துக் கணிப்பு தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

கடந்த ஜூன் 17 ஆம் தேதி சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு கல்விவிழாவை மக்கள் இயக்கம் மூலம் நடத்தினார், இதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

இது விஜய்யின் அரசியல் வருகையின் தொடக்கம் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் இரவு நேர இலவச பயிலகம் திட்டத்தை தொடங்கினார்.

இந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வரலாமா? அவரது அரசியல் வருகையால் எந்த கட்சி பாதிக்கும், தமிழக அரசியலில் விஜயால்  மாற்றம் ஏற்படுமா உள்ளிட்ட 5 கேள்விகளை முன்வைத்து பிரபல  ஊடகம் ஒன்று  கருத்துக்கணிப்பு நடப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

சென்னை, கொங்கு மண்டலம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில், விஜய் அரசியலுக்கு வரலாம் என மாணவ, மாணவிகள் 72.50 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர். அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என 27.50சதவீதம் பேரும், விஜய்க்கு வாக்களிப்போம் என்று 71.56 சதவீதம் பேரும்,  விஜய்க்கு வாக்களிக்கமாட்டோம் என 58.44 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் விஜய் கூட்டணி வைக்க 52.70 சதவீதம் பேரும்,  அவர் அரசியல் வரவால் திமுகவுக்கு 40.16 சதவீதம் பாதிப்பு ஏற்படும் எனவும், அதிமுகவுக்கு 20.75 சதவீதம் பாதிப்பு எனவும், நா.த.கட்சிக்கு 22.11 சதவீதம் பாதிப்பு என கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

விஜய்யால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என 76.53 சதவீதம் பேரும், இதற்கு எதிராக 23.47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்த கருத்துக் கணிப்பு விஜய்க்கு ஆதரவாக வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.