1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (08:38 IST)

கூட்டணிக்கு யாரும் வரலைன்னா என்ன..? அறிக்கை தயாரிக்க மக்கள் கருத்து கேட்பு பயணம் தொடங்கிய அதிமுக!

நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில் இன்று முதல் மக்கள் கருத்துக்கேட்பு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளது.



நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக தனித்து கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதற்காக கூட்டணி பேச்சுவார்த்தை குழு, அறிக்கை தயாரிப்பு குழு என 4 குழுக்கள் பிரிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு அதிமுக அழைப்பு விடுத்திருந்தும் எந்த கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி பேச வரவில்லை.

எனினும் அதிமுக தொடர்ந்து தனது தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக மக்களின் கருத்துகளை கேட்பதற்கான சுற்றுப்பயணத்தை அதிமுக தொடங்குகிறது. இதில் மக்களின் நிறை, குறைகள், என்ன மாதிரியான திட்டங்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பவற்றை கேட்டறிந்து அவர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

இன்று அதிமுக தேர்தல் அறிக்கை குழு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களிலும், நாளை விழுப்புரம், சேலம் மாவட்டங்களிலும், 7ம் தேதியன்று தஞ்சை, திருச்சி, 8ம் தேதி கோவை மண்டலம், 9ம் தேதி மதுரை மண்டலம், 10ம் தேதி திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் கருத்து கேட்பு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K