வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2024 (21:50 IST)

நான் விஜய்யை பற்றி விமர்சனம் பண்ணவில்லை-டி. ராஜேந்தர்

vijay, t. rajendar
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நேற்று  தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்து தனது அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
 
அதில், 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று தெரிவித்திருந்தார்.

விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது புதிய கட்சி பற்றி அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் விஜய்க்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.

இன்று நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், அரரசியல் என்பது பொதுவழி, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வேண்டுமானாலும்,  கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி பண்ணவில்லை. நான் கடவுளிடம் கேட்பது தமிழ் நாட்டு மக்களுக்கு விமோச்சனம் என்று கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் சிம்புவின் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்ட அதை வெளியிட முடியாதபோது, நடிகர் விஜய் தலையிட்டு அப்படத்தை ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.