1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 மார்ச் 2019 (15:38 IST)

என்ன ஆச்சு ஸ்டாலினுக்கு? கூட்டணி பங்கீட்டில் ஏன் இப்படி திணறுகிறார்?

கூட்டணியில் தோழமைக் கட்சிகளுக்கு திமுக பெரும்பாலான இடங்களை ஒதுக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திமுக காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை வழங்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 1 தொகுதிகளை வழங்கியுள்ளது. 
 
இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும் மதிமுகவிற்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
காங்கிரசிற்கு 10 தொகுதிகள், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி, மதிமுகவிற்கு 2 தொகுதி என இதுவரை 18 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக.
 
போகிறபோக்கை பார்த்தால் திமுக 20 இடங்களில் நிற்பதே கடினம் போலிருக்கிறது. ஏன் இத்தனை கூட்டணி கட்சிகள், ஏன் அவர்களுக்கு இத்தனை தொகுதிகள் வழங்க வேண்டும்? திமுக தனித்து போட்டியிட பயப்படுகிறதா? ஆளும் அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதிகளை வழங்கியபோது ஏன் திமுக காங்கிரஸிற்கு 10 இடங்களை ஒதுக்கியது? மக்களிடையே திமுக மீதான நம்பிக்கை சரிந்ததால், கூட்டணி வைத்து வெற்றியடைய பார்க்கிறதா? அல்லது கலைஞர் போல வியூகங்களை அமைக்க ஸ்டாலினுக்கு தெரியவில்லையா?  என பல கேள்விகள் மனதில் எழுகிறது.
 
ஜெயலலிதா, கருணாநிதி என இரு பெரும் ஆளுமைகள் இருந்த போது, இரு திராவிடக்கட்சிகளுக்கு இருந்த தைரியம் இப்பொழுது இல்லை என தெளிவாக தெரிகிறது. அதனாலேயே கூட்டணி வியூகங்களை அமைத்து தேர்தலை சந்திக்க இரு கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.