விசிகவை அடுத்து மதிமுகவுக்கும் 'உதயசூரியன்? அதிர்ச்சியில் வைகோ!
திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளை பெற்று இணைந்துள்ள திருமாவளவனின் விசிக, உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடும் என தெரிகிறது. இதனால் திருமாவளவன் உள்பட கட்சியின் நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் விசிகவை அடுத்து கூட்டணியில் இணையவுள்ள மதிமுகவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக தரப்பில் இருந்து அழுத்தம் தரப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சுமார் 20 வருடங்களுக்கும் மேல் கட்சி நடத்தி வரும் வைகோ, இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட சம்மதிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் அவருக்கு வேறு வழி இல்லை என்பதால் திமுகவின் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று கூறப்படுகிறது.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் அவர் திமுக எம்பியாகவே கருதப்படுவார். திமுக அனுமதியின்றி வேறு கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இத்தனை ஆண்டுகளாக மக்களிடம் அறிமுகம் செய்திருந்த மோதிரம் மற்றும் பம்பரம் சின்னத்தில் போட்டியிடாமல் உதயசூரியன் சின்னத்தில் இந்த இரு கட்சிகளும் போட்டியிட்டால் அக்கட்சியின் வேட்பாளர்கள் தங்களது தனித்தன்மையை இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது