1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (09:26 IST)

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி… ஆனால் அதற்கு முன் செய்யவேண்டியது!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி… ஆனால் அதற்கு முன் செய்யவேண்டியது!
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புவர்கள் கோ வின்  என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அரசு மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் அவ்வாறு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவர்கள் அனைவரும் கோ வின் என்ற தளத்தில் பதிவு செய்வது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.