தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தில் மழை குறித்த எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில், சற்றுமுன் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.
பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், அதிகாலை நேரங்களில் பனிமூட்டமும் காணப்படுகின்றது.
இந்த நிலையில், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இரவு நேரங்களில் முறை பணிக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று, ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும் தெரியவந்துள்ளது.
Edited by Siva