புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரங்கள்..!
சென்னை மெட்ரோ ரயில் சேவை விடுமுறை நாட்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி செயல்பட்டு வரும் நிலையில் இன்று புத்தாண்டு விடுமுறை என்பதால் இன்றும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணை பணி செயல்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
01-01-2025 (புதன்கிழமை) புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று (01-01-2025) விடுமுறை நேர அட்டவணை பின்பற்றப்படும்.
மெட்ரோ ரயில்கள் வழக்கமான சேவை நேரத்தில் காலை 05:00 மணி முதல் இரவு 23:00 மணி வரை இயங்கும்.
மதியம் 12:00 மணி முதல் இரவு 20:00 மணி வரை: மெட்ரோ ரயில்கள் 7 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும்.
காலை 05:00 மணி முதல் மதியம் 12:00 மணி & இரவு 20:00 மணி முதல் 22:00 மணி வரை: மெட்ரோ ரயில்கள் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும்.
இரவு 22:00 மணி முதல் 23:00 மணி வரை: மெட்ரோ ரயில்கள் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும்.
எனவே இன்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் மேற்கண்ட அட்டவணையை தெரிந்து கொள்ளவும்..