1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (06:35 IST)

இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரா கமல்? எந்தெந்த தொகுதிகள்?

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள கமல்ஹாசன் 2019ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சியினர் போட்டியிட்டனர். கமல்ஹாசன் அந்தத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிடவில்லை 
 
இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என ஏற்கனவே கமல் அறிவித்திருந்தார். இதனை அடுத்து தற்போது அவர் போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது
 
மக்கள் நீதி மய்யம் கட்சியில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் தற்போது பெற்று வரும் நிலையில் கமல்ஹாசன் தென் சென்னை தொகுதியில் உள்ள திநகர் அல்லது மயிலாப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது இரண்டிலும் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
கடந்த லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதியில் கமல் கட்சிக்கு அதிக வாக்கு கிடைத்ததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் கண்டிப்பாக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆவார் என்று அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்