ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 மார்ச் 2019 (17:39 IST)

முகிலனை தொடர்ந்து தேடுவதாக சிபிசிஐடி தகவல்

டிஎஸ்பி தலைமையில் 17 தனிப்படைகள் அமைத்து 251 சாட்சிகளிடன் விசாரணை செய்து வருவதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
 
முகிலனை மீட்கக்கோரி ஹென்றி திபேன் தாக்கல் செய்த மனு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
ரயில் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை சேகரித்துள்ளோம். விசாரணை சரியான திசையில் செல்கிறது என்று சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 9 பக்க அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
 
அதில்  முகிலன் பயன்படுத்திய இரண்டு செல்போன்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்று சிபிசிஐடி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் தெரிவித்துள்ளது.