செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2017 (13:48 IST)

ஓரளவிற்குதான் பொறுக்க முடியும்..செய்ய வேண்டியதை செய்வோம் - மிரட்டும் சசிகலா

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, அமைதியாக இருக்கிறோம். ஓரளவிற்குதான் பொறுமையாக இருக்க முடியும் என அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா எச்சரித்துள்ளார்.


 

 
அதிமுக எம்.எல்.ஏக்கள் 134 பேரின் ஆதரவும் தனக்கு இருப்பதால்,  தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கடந்த 8ம் தேதி ஆளுநரை சந்தித்து சசிகலா கோரிக்கை வைத்தார். ஆனால், இதுவரை ஆளுநர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.. 
 
இந்நிலையில், விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என சசிகலா, ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், போயஸ் கார்டனில் இன்று அதிமுக தொண்டர்களுக்கு இடையே அவர் பேசிய போது கூறியதாவது:
 
அதிமுக இயக்கம் ஒரு இரும்பு கோட்டை, அதை யாரும் அசைக்க முடியாது.. ஜெயலலிதா நம்மிடமே உள்ளார்....ஒன்றரைகோடி தொண்டர்களை ஜெயலலிதா விட்டுச் சென்றார்... அவர்களை நான் நல்ல முறையில் வழிநடத்துவேன்..
 
இந்த கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது...அதிமுக பிரிக்க நினைப்பவர்கள் தோற்றுப் போவார்கள்.. எம்.ஜி.ஆருக்கு பிறகு பல சோதனைகளை தாண்டி ஜெயலலிதா கட்சியையை வளர்த்தெடுத்தார். நமக்கு தற்போது சோதனை வந்துள்ளது. இதில் வென்று காட்டுவோம்.
 
இந்தியாவிலேயே அதிமுக 3 வது பெரிய கட்சி என்ற இடத்தில் உள்ளது. ஜெயலலிதா என்னுடன் துணை இருக்கும் போது என்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது...நீங்கள் இவ்வளவு பேர் என்னுடன் இருக்கும் போது நான் எதற்கும் பயப்பட தேவையில்லை.
 
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதால் சற்று அமைதி காக்கின்றோம்... ஓரளவிற்கு மேல் பொறுமையாக இருக்க முடியும். அதற்கு மேல் செய்ய வேண்டியதை செய்வோம்...” என அவர் காட்டமாக பேசினார்.

ஆளுநருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சசிகலா பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...