1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmdk president and actor vijayakanth hospitalized

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆச்சு?

தேமுதிக
கடந்த சில வருடங்களாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக அப்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளன 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தேமுதிக தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விஜயகாந்த் அவர்களுக்கு வழக்கமாக பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரிரு நாளில் அவர் வீடு தருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற்று விரைவில் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது கட்சியின் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
10 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம்: ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்..!