1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (20:25 IST)

பால்தாக்கரேவின் 11-ம் ஆண்டு நினைவு நாள்

Bal Thackeray
சிவசேனா கட்சியை நிறுவிய பால்தாக்கரே அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு நாள் கரூர் மாவட்ட சிவசேனா சார்பில்  அனுசரிக்கப்பட்டது.
 
சிவசேனா கட்சியை நிறுவிய பால்தாக்கரே அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்தியா முழுவதும் ஆங்காங்கே அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பால்தாக்கரே அவர்களுக்கு  கரூர் மாவட்ட சிவசேனா சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கரூர் பேருந்துநிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட சிவசேனா மாவட்ட தலைவர் எம்.சரவணன் தலைமை வகித்தார்.

மேலும், மறைந்த பால்தாக்கரே அவர்களுக்கு மலர்களால் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் முரளி,  மாவட்ட செயலாளர் ஆனந்த், கிழக்கு மாவட்ட செயலாளர் காமராஜ், கரூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கரண், மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட இளைஞரணி செயலாளர் திருப்பதி ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளாமனோர் கலந்து கொண்டு சிவசேனா கட்சியின் நிறுவனர் பால்தாக்கரேவின் திருவுருவப்பட்த்திற்கு மலர் மாலை அனிவித்து மலரஞ்சலி செலுத்தி வீர வணக்கம் செலுத்தினர்.