10 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம்: ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்..!
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் ஆளுனர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்வதாகவும், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஆளுனரின் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva