சய்லெண்ட் மோடில் ஸ்டாலின்: முட்டி மோதிக்கொள்ளும் கூட்டணி கட்சிகள்!!

stalin
Last Updated: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (12:47 IST)
காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ப.சிதம்பரத்தை இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். 
 
கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி சுதந்திர தின உரையை வழங்கினார். மோடியின் உரையை ப.சிதம்பரம் பாராட்டினார். குறிப்பாக நான்கு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு பாராட்டினார். 
 
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன், ப.சிதம்பரத்தின் ஆதரவை விமர்சித்துள்ளார். முத்தரசன் கூறியதாவது பிரதமர் மோடி சொல்வதை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். 
ஆனால் அது என்ன நிர்பந்தம் என்று ப.சிதம்பரத்திற்கும், மோடிக்கு மட்டுமே தெரியும் என்று குறிப்பிட்டு பேசிள்ளார். வைகோ மற்றும் கே.எஸ். அழகிரி பிரச்சனை முடியாத நிலையில் இந்த பிரச்சனை கிளம்பியிருப்பது கூட்டணி கட்சிகளுக்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
திமுகவுடன் கூட்டணி கட்சிகளாக இருக்கும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் நேரடியாக காங்கிரஸ் கட்சியையும், கட்சினியின் முக்கிய நபர்களையும் விமர்சிப்பது கூட்டணிக்குள் பிளவு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. 
இருப்பினும் தலைவர் ஸ்டாலினோ அல்லது கட்சியை சேர்ந்த முக்கிய நபர்களோ இது குறித்து மவுனம் காப்பது, காங்கிரசை விமர்சிக்க அனுமதி வழங்குவது போல உள்ளதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :