வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (16:20 IST)

பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது தேவையில்லாத வேலை! - திருமாவளவன் கருத்து!

பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது தேவையில்லாத வேலை! - திருமாவளவன் கருத்து!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியா இந்தியா போரில் இறங்குவது தேவையற்றது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா சென்றவர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்தி நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள இந்திய அரசு பாகிஸ்தானுடனான போர் சூழலுக்கு தயாராகி வருகிறது. பாகிஸ்தானும் போருக்கு தயாராக ஏற்பாடுகளை செய்து வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன் “பாகிஸ்தானை அந்நியப்படுத்த வேண்டுமே தவிர அவர்களுடன் போர் தேவையில்லாதது. நம் நாட்டின் வலிமையை வேறு நாட்டின் மீது நிரூபித்துக் காட்டக்கூடாது. 

காஷ்மீரில் நடந்த தாக்குதல் மதத்தைப் பார்த்து நடந்த தாக்குதல் போல தெரியவில்லை. இது இரு நாட்டிற்கும் போராக மாறிவிடக்கூடாது. பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு துணை போகிறது என்றால் அதை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K