1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Indian Government Orders Pakistani Nationals to Leave Within 24 Hours After Kashmir Terror Attack

தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுப்பு தொடக்கம்.. 48 மணி நேரத்தில் வெளியேற்றம்..!

பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்
காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என மத்திய அரசு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
இந்த உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மாநிலங்களிலும் பாகிஸ்தானியரை கண்டறிந்து வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இதற்கான நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
பாகிஸ்தானில் இருந்து மருத்துவ விசா மூலம் சென்னை மற்றும் வேலூரில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக பயணிகள் தொடர்ந்து வருவது வழக்கமாக உள்ளது. இவர்கள் தவிர, தொழில் தொடர்பாக மற்றும் திருமண உறவுகளுக்காக இந்தியா வந்துள்ளவர்களும் உள்ளனர். குறிப்பாக டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா பகுதிகளில் பாகிஸ்தானியர்களின் வருகை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
 
தற்போது, பாகிஸ்தானியர்கள் எங்கு எவ்வளவு பேர் தங்கியுள்ளார்கள் என்பதற்கான முழு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் காரணங்களைத் தவிர மற்ற நபர்களை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றா நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருத்துவ நோக்கில் தங்கி இருப்பவர்களை மனிதநேயம் கொண்ட பார்வையில் பார்க்கப்படும் என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்  முற்றிலும் வெளியேற்றப்படுவார்கள் என அரசு உறுதி தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ஐநா சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும்: மதுரை ஆதினம் ஆவேசம்