வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 3 செப்டம்பர் 2022 (15:45 IST)

தொழிலதிபரை கொன்று பிளாஸ்டிக் கவரில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்!

சென்னை சின்மயா நகரில் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரைக் கொன்று பிளாஸ்டிக் கவரில் சடலத்தை வீசிச் சென்றுள்ளளனர் மர்ம நபர்கள்.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாஸ்கரன். இவர் ரியல் எஸ்டேட், கட்டுமானம், பைனான்ஸ், சினிமா தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.

இவர் நேற்று காலை வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட நிலையில், அவர் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. அவர் செல்போன் எண்ணும் சரியாக இயங்கவில்லை என்பதால், இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீஸில் புகாரளித்தனர்.

இந்த  நிலையில்,  இன்று சின்மயா நகரில் பிளாஸ்டிக் அக்வரில்  பாஸ்கரன் உடல் மர்ம  நபர்களால் வீசிச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடய அறிவியல் வல்லுனர்களை வரவழைத்தும் ஆய்வு செய்தனர். அதில், கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டதும், கூலிப்படையினர் பாஸ்கரனை கொன்றிருக்கலாம் என கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.