தலித் சமைத்த உணவு… சாப்பிட மறுத்த மாணவர்களால் சர்ச்சை!
தலித் சமையல்காரர் தயாரித்த காலை உணவை மாணவர்கள் சாப்பிட மறுத்ததால் கரூர் பள்ளியில் பரபரப்பு.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புதிய காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மொத்தம் 17 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். இத்திட்டத்திற்காக தமிழக அரசு 404.41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இலவச காலை உணவுத் திட்டத்தின் கீழ் கரூர் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் சுமதி என்பவர் காலை உணவை தலித் சமூகத்தை சேர்ந்த சுமதி என்பவர் சமைத்து வந்துள்ளார். தலித் இன பெண் சமைப்பதால் அந்த பள்ளியில் பாதி மாணவர்கள் காலை உணவை புறக்கணித்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்று சாதி பாகுபாடு காட்டுவதாக பெற்றோரை எச்சரித்தார். பின்னர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சமையல்காரரிடம் தொடர்ந்து பாரபட்சமாக நடந்து கொண்டால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்தார்.