செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 டிசம்பர் 2023 (13:04 IST)

பொன்முடி தொகுதிக்கு இடைத்தேர்தலா? சட்டம் என்ன சொல்கிறது?

Election Commission
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்எல்ஏ பதவி பறிபோனது. இதனால் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தற்போது காலியாக உள்ளது. 
 
ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி ஆக இருப்பவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பதவி இழந்தால் அந்த தொகுதிக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும். மேல்முறையீடு செல்வதாக கூறி, மேல்முறையீடு நிலுவையில் உள்ளது உள்ளிட்ட காரணங்களை கூறி தேர்தலை தள்ளிப் போடக்கூடாது என ஏற்கனவே மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
இதனால் மேல்முறையீடு வழக்கை விரைந்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேல்முறையீடு வழக்கில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பதவி இழந்தால் உடனடியாக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் எந்த ஒரு சட்டமன்ற மக்களவைத் தொகுதியையும் காலியாக வைத்திருக்காமல் உடனடியாக தேர்தலை நடத்தி குடிமக்களின் பிரதிநிதித்துவ உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஏற்கனவே சில நீதிமன்ற தீர்ப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன. 
 
எனவே  பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva