1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 ஜனவரி 2021 (14:19 IST)

தமிழக முதல்வருக்கு தனது கைப்பட காமெடி நடிகர் எழுதிய கடிதம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தனது கைப்பட காமெடி நடிகர் விவேக் ஒரு கடிதம் எழுதியுள்ளார் 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வரை நடிகர் விவேக் சந்தித்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை பெயரை வள்ளலார் நெடுஞ்சாலை என மாற்றம் செய்ய வேண்டும் என கூறியிருந்தார் 
 
இதுகுறித்து தற்போது அவர் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘அருள்பெரும் தமிழ் சித்தர் மகான் ஒளியும் ஆகிய இறைவனுடன் கலந்த வள்ளல் பெருமான் சென்னை திருவொற்றியூரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்தவர். அவர் தினமும் வடிவுடை அம்மன் கோவிலுக்கு நடந்து சென்ற பாதை திருவொற்றியூர் நெடுஞ்சாலை என இப்போது அழைக்கப்படுகிறது
 
அதை வள்ளலார் நெடுஞ்சாலை என பெயர் மாற்றம் செய்தால் பல லட்சம் தமிழர்கள் நன்றியோடு அரசை பாராட்டுவார்கள். திருவருட்பா தந்த வள்ளல் பெருமானுக்கு நாம் செய்யும் சிறப்பு ஆகும் தயவுகூர்ந்து வள்ளலார் நெடுஞ்சாலை என பெயர் மாற்றம் செய்ய ஆன்மீக தமிழ் சமுதாயம் சார்பில் கேட்கிறேன் என்று விவேக் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்