பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர்!

eps
பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர்!
siva| Last Updated: செவ்வாய், 19 ஜனவரி 2021 (12:35 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமரை சந்திப்பதற்காக நேற்று டெல்லி சென்றிருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று காலை பிரதமரை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது
தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை திறந்துவைக்க தமிழகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தேன் என்றும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் நிலை இரண்டுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் தமிழக முதல்வர் கூறினார்

தமிழகத்தில் தாக்கிய இரண்டு புயல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களுக்கான நிவாரண நிதிகளை விரைவில் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார். மேலும் இலங்கை கடற்படையினர்களால் கைது செய்யபப்ட்ட 12 மீனவர்களை விடுவிக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வதாக பிரதமர் தெரிவித்ததாகவும் முதல்வர் கூறினார்
மேலும் பல்வேறு கோரிக்கைகளை பாரத பிரதமர் இடம் வைத்துள்ளதாகவும் அதை அனைத்தையும் பரிசீலித்து விரைவில் தமிழகத்திற்கு செய்து தருவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளதாக முதல்வர் கூறினார்


இதில் மேலும் படிக்கவும் :