1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Vivek moorthi says corona is modifies all time

கொரோனா உருமாறிக்கிட்டே இருக்கும்.. நாம ரெடியா இருக்கணும்! – விவேக் மூர்த்தி தகவல்!

World
உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் அது தொடர்ந்து உருமாறி கொண்டே இருக்கும் என இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் விவேக் மூர்த்தி கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வீரியமிக்க புதிய கொரோனா பாதிப்புகளும் கண்டறியப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ள மருத்துவ குழுவை சேர்ந்த இந்திய வம்சாவளியான விவேக் மூர்த்தி இதுகுறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கொரோனா தொடர்ந்து தன்னை உருமாற்றி கொண்டே இருப்பதாகவும், அதனால் உருமாறும் கொரோனாவிற்கு ஏற்ப நமது நடவடிக்கைகளும், எதிர்கொள்ளும் தன்மைகளும் இருக்க வேண்டுமென விவேக் மூர்த்தி கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
மும்பையிலும் திரண்டனர் விவசாயிகள்: மகாராஷ்டிரம் முழுவதிலும் இருந்து பேரணியாக வந்தனர்