1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 22 நவம்பர் 2017 (02:00 IST)

தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள். கந்துவட்டி கும்பலுக்கு விஷால் எச்சரிக்கை

பிரபல நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார், பைனான்சியர் ஒருவரின் கந்துவட்டி கொடுமையால் நேற்று தற்கொலை செய்து கொண்டது கோலிவுட் திரையுலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.




இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து கேள்விப்பட்ட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியதாவது: கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும் கட்டப்பஞ்சாயத்து நபர்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுகிறேன். இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்' என்று எச்சரித்துள்ளார்/

மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும் என்றும் கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாக்கப்படும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கவனத்திற்கு அதனை கொண்டு வந்தால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

மேலும் இதனை தற்கொலை என்று பாராமல் கொலை என்ற கோணத்தில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.