திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (18:08 IST)

விஷால் வீட்டில் கோடிக்கணக்கில் ரூ.2000 நோட்டா? ரெய்டின்போது எடுத்த அதிர்ச்சி வீடியோ

நடிகர் விஷால் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சோதனையின்போது அவர்  சில லட்சங்களுக்கு வருமானவரி கட்டவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து அவர் நேரில் ஆஜராகி விளக்கமளித்ததாகவும் செய்திகள் வெளியானது


 


இந்த நிலையில் விஷால் அலுவலகத்தில் ரெய்டின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் ஒரு மேஜையின் மீது கோடிக்கணக்கில் ரூ.2000 நோட்டுக்கட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்டு அதிகாரிகள் விஷாலை கேள்விகளால் துளைத்த காட்சிகள் இருந்தன

இந்த விசாரணையின்போது திடீரென குறுக்கே வந்த நடிகர் அர்ஜூன், ஷாட் ரெடியாகிவிட்டதாக இயக்குனர் கூறுகிறார், இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று சொன்னவுடன் தான், அது விளையாட்டு வீடியோ என்பதும், அந்த பணக்கட்டுக்கள் 'இரும்புத்திரை படத்திற்காக தயார் செய்யப்பட்ட போலி ரூபாய் நோட்டுக்கள் என்பதும் தெரியவந்தது. இந்த வீடியோ இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.