திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2017 (13:41 IST)

“கமல்ஹாசன் நல்ல அரசியல்வாதியா வரலாம்” - கார்த்தி

‘கமல்ஹாசன் நல்ல அரசியல்வாதியா வரலாம்’ என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.



 


வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ளார். நாளிதழ் ஒன்றில் வெளியான உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கார்த்திக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால், ‘காக்கி’ என்ற பெயரில் அங்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

‘நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?’ என கார்த்தியிடம் கேட்க, “எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. அரசியலுக்கு வர எனக்கு நேரமில்லை” எனப் பதிலளித்தார். கமல்ஹாசன் மற்றும் விஷாலின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த கார்த்தி, “விஷாலுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. எனவே, அவர் அரசியலுக்கு வரலாம். கமல்ஹாசன் சார் நல்ல அரசியல்வாதியா வரலாம். அவர் ஒரு விஷயத்தைப் பற்றி பேசினாலோ, செய்தாலோ... அதைப்பற்றி முழுமையா ஆராய்ச்சி பண்ணிட்டுத்தான் இறங்குவார். அவர் முடிவு பண்ணி இறங்கிட்டா, அதிலிருந்து பின்வாங்க மாட்டார். அவர் அரசியலுக்கு வந்தால், மக்கள் அவரை எளிதில் அணுக முடியும்னு நம்புறேன்” என்றார்.