1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2017 (12:00 IST)

கடவுளே என் நாட்டை காப்பாற்று - விஷால் கதறல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.


 
விஷாலின் வேட்புமனு நேற்று முன்தினம் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியால் நிராகரிக்கப்பட்டது. விஷாலை முன்மொழிந்த இருவரது கையெழுத்து போலி என்ற குற்றச்சாட்டு காரணமாக அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 
 
இதற்கு விஷால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது டிவிட்டர் பக்கம் மூலம் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபாதி அலுவலகத்திற்கும் அவர் புகார் அனுப்பினார். மேலும், நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து தனது வேட்புமனுவை மறுபரிசீலனை செய்யும் கோரிக்கை மனுவை கொடுத்தார். ஆனால், விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது சரிதான் என அவரும் கை விரித்து விட்டார்.
 
இந்நிலையில் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் “ ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும் என நம்புகிறேன். கடவுளே! என் இந்த ஆராஜகங்களிலிருந்து என் நாட்டைக் காப்பாற்று” என பதிவிட்டுள்ளார்.