திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 டிசம்பர் 2017 (18:27 IST)

விஷால் விவகாரம்: கமல்ஹாசனின் மெளனம் ஏன்?

நேற்று மாலை முதல் விஷாலின் வேட்புமனு பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு பின் மீண்டும் நிராகரிக்கப்பட்ட கூத்து தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் அதிகாரியின் நடவடிக்கைகள் வெட்டவெளிச்சமாக ஆளும் அரசுக்கு சாதகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன

இந்த நிலையில் ஆளும் கட்சியின் தவறுகளை அவ்வப்போது தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டி பரபரப்பை ஏற்படுத்தி வரும் கமல், விஷால் விஷயம் நடைபெற்று முழுதாக ஒருநாள் ஆகியும் இன்னும் பொங்கியெழாமல் மெளனம் காத்து வருகிறார்

அரசியல் குளத்தில் தான் குதிக்கவிருக்கும் நிலையில் தனக்கு முன்பே விஷால் குதித்தவிட்டதால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக கமல் மெளனமாக இருக்கின்றாரா? என்ற கேள்வி எழுகிறது. மேலும் கமலுக்கு போட்டியாளர் ரஜினிதான் என்றும், ரஜினி குறித்து எதாவது பரபரப்பு செய்தி வந்தால் மட்டுமே கமல் தனது டுவிட்டரில் பொங்கி எழுவார் என்றும் ஒருசாரார் கூறி வருகின்றனர்.