1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (20:52 IST)

கருணாநிதிக்கு மறைவுக்கு பின் ரஜினி-ஸ்டாலின் திடீர் சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு கமல், ரஜினி, அஜித், விஜய் உள்பட திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் இன்று கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி, குஷ்பு, எஸ்.பி.முத்துராமன், விக்கிரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மு.க.ஸ்டாலினும், ரஜினியும் அருகருகே இந்த நிகழ்ச்சியின்போது உட்கார்ந்திருந்தனர் என்பதும் கருணாநிதியின் மறைவிற்கு பின் இருவரும் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் உள்பட ஒருசிலர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.