சிசிடிவியின் முன் காதலியை கொஞ்சுவது போல் கொஞ்சிய நபர் !வைரல் வீடியோ
காதலியிடம் செல்போனில் பேசுவது போல் சிசிடிவின் கேமரா முன் ஒரு நபர் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
இணையதளம் மலிந்துள்ள இன்றைய காலத்தில் யாருக்கும் என்ன செய்தியும் எடுத்த வேகத்தில் வந்து சேருகிறது. இதனால், உலகம் குறித்த அறிவும் அனுபவமும் அதிகரிக்கிறது. ஆனால், இது நல்லதாகப் பயன்படுத்திக் கொள்வதும் தீயதாகதாக் கொள்வதும் அவரவர் கையிலுள்ளது.
இந்த நிலையில், சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள தென்றல் நகரில் ஒரு கடையின் முன் வைத்துள்ள சிசிடியிடம் கஞ்சாப் போதையில் ஒரு இளைஞர் காதலியிடம் கொஞ்சுவதுபோல் கொஞ்சிய வீடியோ பரவலாகி வருகிறது.
இது நெட்டிசன்களிடையே சிரிப்பை ஏற்படுத்தினாலும், போதையில் இப்படி செய்த இளைஞரின் செயலுக்கு விமர்சனம் எழுந்து வருகிறது.