ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (21:38 IST)

மதுவிருந்தில் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பெண் பிரதமர்- வைரலாகும் வீடியோ...

pm sanna marin
பின்லாந்து நாட்டின் பெண் பிரதமர் சன்னா மரீன் மதுபோதையில் நண்பர்களுடன் ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பின்லாந்து நாடு கல்விக்காகவும் அங்குள்ள கல்விமுறைக்காகவும் பெரிதும் பேசப்படும் நாடு.  இங்குள்ளா கல்வி திட்டங்கள் பல நாடுகளில் முன் மாதியாக வைப்படுகின்றனர். பலரும் இங்கு வந்து கல்வி முறைகுறித்து தெரிந்துகொண்டு போகின்றனர்.

இந்த நிலையில் பின் லாந்து நாட்டில் பிரதமர் சன்னா மரீன் (34) தலைமையிலான  ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சியிலுள்ளது.

உலகின் இளம்வயது பிரதமர் என்ற பெருமையுள்ள இவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் தன் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்றுக்கொண்டு டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பொறுப்புணர்வின்றி மது அருந்திவிட்டு டான்ஸ் ஆடும் சன்ன மரீனாவுக்கு பலரும் கண்டனங்களும் விமர்சனங்களும் குவிந்து வருகிறது