1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (21:06 IST)

மடியில் குழந்தையைக் கட்டிக்கொண்டு உணவு விநியோகிக்கும் பெண் !

zomato
தனது மகளை  மடியில் கட்டிக்கொண்டும், இன்னொரு மகனை வண்டியின் பின்புறம் உட்கார வைத்துக்கொண்டு உணவு விநியோகித்து வரும் வீடியோ பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல சோமோட்டோ நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பெண், வாடிக்கையாளர்களுக்கு உணவு  விநியோகிக்கும்போது, தன்  கைக்குழந்தையை மடியில் தூக்கிக்கொண்டும், மற்றோரு குழந்தையை இரு சக்கர வாகனத்தின் பின்புறம் உட்கார வைத்துக் கொண்டு குறிப்பிட்ட வீடுகளுக்குச் சென்று உணவு வி  நியோகிக்கும் வீடியோவை   சமூக ஆர்வலர் ஒருவர் வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து அப்பெண்ணிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் தன் வீட்டில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லாத்தால் அவர்களை  அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆனால், இப்படி ஆபத்தான முறையில் இரு சக்கர வாகனத்தில் குழந்தையை தூக்கிச் செல்ல வேண்டாம் என சில அறிவுரை கூறி வருகின்றனர்.