திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (16:54 IST)

விமான நிலையத்திற்கு வந்த விஜய்... ''The BOSS Returns ''வைரல் வீடியோ!

Vijay
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் சென்னை விமான நிலைத்திற்கு வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில்ராஜு தயாரிப்பில் ‘’வாரிசு ‘’என்ற நேரடி தெலுங்கு – தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதலிரண்டு போஸ்டர்கள் வெளியாகி வைரலானது.

மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் வாரிசு படத்தின் ஷூட்டிங் சமீபத்தில், விசாகப்பட்டிணத்தில் நடந்தபோது, விஜய்யின் ஆக்சன் வீடியோ லீக் ஆனது. இதையடுத்து நேற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் புகைப்படம் கசிந்தால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில்,  விசாசபட்டிணம் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு விஜய் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சில நாட்கள் ஓய்விற்குப் பின் அவர் மீண்டும் வாரிசு பட ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என தெரிகிறது.