திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (15:25 IST)

புதைமண்ணில் புதைந்து உயிருக்குப் போராடிய சிறுவன் மீட்பு! வைரலாகும் வீடியோ

boy rescue
நெய்வேலி அருகே மண்ணுக்குள் மார்பளவுக்கு புதைந்து உயிருக்குப் போராடிய சிறுவனை இளைஞர்கள் மீட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில்  உள ஊ. மங்களத்தி.ல், புதை மண் இருப்பது தெரியாமல் சென்ற  ஏழு வயது சிறுவன் ஒருவர் அதில் சிக்கிக் கொண்டார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் புதை மண்ணில் இறங்கி, மண்ணுக்குள் மார்பளவு புதைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த இளைஞர்கள் 4 பேர், புதை குழியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனை லாவகமாக மீட்டனர்.

இன்னும் சிறிது நேரம் போயிருந்தால் சிறுவனுக்கு அசம்பாவிதம் நடந்திருக்கும் என்ற நிலையில், சிறுவனைக் காபாற்றிய இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இளைஞர்களின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.