மாணவர்களிடையே வன்முறை ... ? மக்கள் அதிர்ச்சி
பள்ளி பருவத்தில் மாணவர்களிடையே வன்முறை தொடருதா ? வன்முறை கலாச்சாரம் அதுவும் மாணவப்பருவத்திலேயே கரூர் காவல் நிலையத்தின் அருகே அடிதடி தமிழக அளவில் வைரலாகி வரும் வீடியோ.
தற்போது தான் கொரோனா காலம் முடிந்து மெல்ல பள்ளிகளும், கல்லூரிகளும் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பள்ளி மாணவர்கள் ஒழுங்கில்லாமல் கூட்டம், கூட்டமாக செல்வதும், கொஞ்சம் கூட சமூக இடைவெளி என்பது பள்ளிகளில் அதிலும் தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் கிடையவே கிடையாது., இந்நிலையில் பள்ளி திறந்து ஒரு சில வாரங்கள் கூட இல்லை, அதற்குள் தமிழக அளவில் ஆங்காங்கே மாணவர்களுக்கிடையே தகராறு அடிதடி என்றெல்லாம் தாண்டி சென்னையில் மாணவிகளுக்குள்ளும் அடிதடி எல்லாம் செய்திகளாகவும் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கரூரில் அடிதடியில் ஈடுபட்ட மாணவர்களின் வீடியோ தற்போது தமிழக அளவில் வைரலாகி வருகின்றது.
கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் புதன்கிழமை (22-12-2021) மாலை மாணவர்கள் கூட்டமாக நடந்து வந்து கொண்டிருக்கும் போது யூனிபார்ம் போட்டு வந்த மாணவர்களை கலர் சட்டை போட்டு வந்த சிறுவர்கள் கடுமையாக ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். கலர்சட்டை அணிந்து வந்தவர்கள் மாணவர்களா ? அதே பள்ளி மாணவர்களா ? அல்ல ரெளடிகளா என்பது தெரியவில்லை, மேலும், கரூர் நகர காவல்நிலையத்தின் அருகே அதுவும் பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகளவில் உள்ள பகுதியிலேயே இது போல மாணவர்களிடையே அடிதடி ரகளை காட்சிகள் காண்போரை பதபதைக்க வைக்கின்றது. இந்த வீடியோ தற்போது தமிழக அளவில் வைரலாகி வருகின்றது. இந்த மாணவர்கள் அரசுப்பள்ளி மாணவர்களா ? அல்ல தனியார் பள்ளி மாணவர்களா ? எதற்காக இந்த சண்டை மற்றும் தகராறு என்பது புரியாத புதிராக உள்ள நிலையில். மாணவப்பருவத்தில் கூட வன்முறையாட்டம் என்பது தற்போது வளரும் தலைமுறையினரை கேள்விக்குறியாக்கியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டம் பாய வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியானது இனியாவது ஒழுக்கம் பற்றி நல்வழியை ஏற்படுத்த வேண்டுமென்பது சமூக நல ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாகும்