1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 25 அக்டோபர் 2023 (22:24 IST)

பெட்ரோல் குண்டுகளை வீசியவர்கள் தப்பினர்- ராஜ்பவன் அறிக்கை

governor malikai
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டை வீசியதாக கைது செய்யப்பட்டுள்ளார். தேனாம்பேட்டை சேர்ந்த வினோத் என்பவரை பிடித்து போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்தன நிலையில்,  ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பற்றி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதில்,  ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசவில்லை. சர்தார் பட்டேல் சாலையில்தான் வீசினார். ஆளுநர் மாளிகைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை. பிடிபட்ட வினோத் மீது 7 வழக்குகள் உள்ளது என்று சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.

இதையடுத்து, ராஜ்பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல்  நடத்தியவர்கள் தப்பினர் என்று ராஜ்பவன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு